அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த லிபியா மக்கள்
#Protest
Prasu
3 years ago
ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் அந்த நாட்டில் நாடாளுமன்றத்தை சூறையாடியுள்ளனர்.
கடாஃபியின் மறைவிற்குப் பின் லிபியாவில் அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. தற்போதைய அரசிற்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில் டாப்ரட் நகரில் உள்ள லிபியா நாடாளுமன்றத்தை சூறையாடிய மக்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பெரும் பரபரப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.
