IMF உடனான வேலைத்திட்டத்துக்கு ஜப்பான் ஒத்துழைப்பு!

Mayoorikka
3 years ago
IMF உடனான வேலைத்திட்டத்துக்கு ஜப்பான் ஒத்துழைப்பு!

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் மற்றும் இலங்கையின் அபிவிருத்திக்காக இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்திக்கொண்டு முழுமையாக இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஜப்பானிய தூதுவர் ஹிதேகி மிசுகோஷி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று (1) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியிலான உறவுகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதாக அவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

அத்துடன், இலங்கைக்காக ஜப்பான் வழங்கி வரும் ஆதரவிற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜப்பான் தூதுவரிடம் நன்றி தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4