லாப் எரிவாயு நிறுவனம் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல்

Kanimoli
3 years ago
லாப் எரிவாயு நிறுவனம் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல்

லாப் எரிவாயு நிறுவனம் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. 

நுகர்வோருக்கு எரிவாயு கொள்கலன்களை விரைவாக வழங்குவதற்காக அதன் விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக அந்த  நிறுவனம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவை தமது முனையங்களில் மீண்டும் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளதாக லாப் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநியோக முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மூலம் இந்த நிரப்பப்பட்ட எரிவாயு கொள்கலன்களில் அதிகளவானவற்றை தினசரி விநியோகிக்கவுள்ளதாக லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மோசடியான வர்த்தகர்கள் அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக எரிவாயுவை விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் 1345 என்ற வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளுமாறு நிறுவனம் கோரியுள்ளது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4