நாட்டு மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே

Prasu
3 years ago
நாட்டு மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே

நாட்டு மக்களால் அதிகம் வெறுக்கப்பட்டபாராளுமன்ற உறுப்பினர்களில் மகிந்தானந்த அலுத்கமகேயும் ஒருவராகும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம் எம் மஹ்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரால் இன்று (30 ) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

விவசாய அமைச்சராக இருந்து விவசாயத்தையே அழித்து உணவுப் பஞ்சத்தையும் பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியதன் மூலம் மக்களின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உள்ளானவராகும்.

ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் சரியாக வழிநடாத்த முடியாமல் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதாளத்திற்கு தள்ளிய இவரைப் போன்றவர்கள் எரிபொருளுக்காக ரஸ்யாவுடனும் அமீரகத்துடனும் ஜனாதிபதி பேசுகின்றார் என்று ஊடகங்களின் முன் வந்து சொல்வதற்கு வெட்கப் பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4