மொரட்டுவையில் துப்பாக்கிச் சூடு இருவர் உயிரிழப்பு!

Nila
3 years ago
மொரட்டுவையில் துப்பாக்கிச் சூடு இருவர் உயிரிழப்பு!

மொரட்டுவை - கட்டுபெத்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (29) முற்பகல் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுமார் ஒரு மாத காலப்பகுதியில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் 10 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதில் அதிகளவான மரணங்கள் களனி காவல்துறை அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளன.

கடந்த 26 ஆம் திகதி இரவு பேலியகொடை தொடருந்து நிலைய வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவானது.

இதன்போது, முன்னாள் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் பலியானார். அவர் தமது மனைவி மற்றும் இரண்டு வயது மகனுடன் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த போது மேலும் இரண்டு பேரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலே இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என தெரியவந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த முன்னாள் காவல்துறை கான்ஸ்டபிள், 'பொலிஸ் அத்தனாயக்க' என்ற பெயரில் அழைக்கப்படும் பாதாள உலகக்குழு உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4