பிரித்தானிய மன்னர் சார்லஸின் சொத்து வரி விபரம் வெளியீடு

#government #Lanka4 #report #KingCharles #England #L4
Prasu
1 hour ago
பிரித்தானிய மன்னர் சார்லஸின் சொத்து வரி விபரம் வெளியீடு

பிரித்தானிய மன்னர் சார்லஸ் கடந்த வாரம் தெரிவித்ததை போன்று இன்று தனது சொத்து வரி விபரங்களை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய 2024-2025ம் ஆண்டுக் காலப்பகுதியில் அவர் 12.9 மில்லியன் டொலர் செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி பிரித்தானியாவில் வரி செலுத்தும் முதல் 100 பேரின் பட்டியலில் மன்னரும் இடம்பெற்றுள்ளார்.

அதே காலகட்டத்தில் வேல்ஸ் இளவரசர் £7.76 மில்லியன் வரி செலுத்தியதாக, வருடாந்திர அரச அறிக்கை மற்றும் கணக்குகளில் உள்ள புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

மேலும், மன்னரும் ராணி கமிலாவும் கிளாரன்ஸ் ஹவுஸிலேயே தொடர்ந்து வசிப்பார்கள் என்றும், பக்கிங்ஹாம் அரண்மனைக்குக் குடிபெயர மாட்டார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

2023-24ம் ஆண்டிற்கான வரியாக மன்னர் £11.7 மில்லியனையும், அதே காலகட்டத்திற்கு இளவரசர் வில்லியம் £8.34 மில்லியனையும் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னரும் இளவரசர் வில்லியமும் தாங்களாகவே எவ்வளவு வரி செலுத்துகிறார்கள் என்பதை வெளியிடுவது, இருவராலும் எடுக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட முடிவு என்று அவர்களது அலுவலகங்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4