இலங்கையில் தலைதூக்கும் சட்டவிரோத செயற்பாடுகள்!
#SriLanka
#Police
#Fuel
Mugunthan Mugunthan
2 years ago

சப்புகஸ்கந்த – பசறை மற்றும் அத்திமலை ஆகிய பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றி எரிபொருளை பதுக்கி விற்பனை செய்த மூவர் சட்ட விரோதமாக செயல்பட்டதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் 1,740 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 1,220 லீற்றர் பெற்றோலுடன் 60 வயதுடைய நபர் ஒருவர் அத்திமலையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் இன்று சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இதேவேளை, சபுகஸ்கந்த பிரதேசத்தில் 460 லீற்றர் டீசலுடன் 48 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், பசறையில் 60 லீற்றர் டீசல் வைத்திருந்த 40 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



