அம்பாறை மாவட்ட விவசாயிகளிடமிருந்து உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு

அம்பாறை மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் சிறுபோக நெல்லை, அரசாங்க உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்ட சிறுபோக நெற்செய்கை அறுவடை விழா,நேற்று திங்கட்கிழமை (27) அக்கரைப்பற்று மூன்றாம் கட்டை பிரதேசத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
கல்ஓயா வலதுகரை திட்ட முகாமையாளர் எஸ்.எல்.ஏ. அன்சார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் தொடர்ந்து உரையாற்றியதாவது,
அம்பாறை மாவட்டத்தில் கல்ஓயா நீர்ப்பாசன பிரிவின் அதி கூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு இலட்சத்தி 28ஆயிரம் ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு சிறந்த அறுவடை கிடைத்துள்ளது.
நாம், பாரம்பரிய விவசாய செய்கையிலிருந்து விடுபட்டு உயர் தொழில்நுட்பத்தின் மூலம் உயர்ந்த விளைச்சளை பெற்றுக் கொள்கின்றறோம்.



