இலங்கை எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும்? – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Nila
3 years ago
இலங்கை  எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும்? – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதிக்குப் பின்னர் எரிபொருள் மற்றும் எரிவாயு கிடைக்கும் எனவும் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது நாட்டை முடக்கும் நிலை அல்ல எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த காலகட்டத்தில் மக்களின் ஆதரவு தேவை எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இத்தோடு நகரபுற பாடசாலைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதிக்குப் பின்னரே திறக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4