இலங்கையில் மீண்டும் மூடப்படும் பாடசாலைகள் விசேட அறிவிப்பு வெளியாகியது!

Nila
3 years ago
இலங்கையில் மீண்டும் மூடப்படும் பாடசாலைகள் விசேட அறிவிப்பு வெளியாகியது!

இலங்கையில் எதிர்வரும் வாரத்தில் நாடு முழுவதுமுள்ள அனைத்து பிரதான நகரங்களிலும் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 
மாகாண கல்வி அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
 
எரிபொருள் பிரச்சினை காரணமாக, நாடுமுழுவதுமுள்ள அனைத்து பிரதான நகரங்களிலும் உள்ள பாடசாலைகள் இந்த வாரம் இயங்கவில்லை.
 
எனினும், இணையவழி கற்பித்தலை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு மேல் மாகாணம் உட்பட சகல மாகாணங்களிலும் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
 
அத்துடன், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோரின் போக்குவரத்துக்கு சிரமங்கள் ஏற்படாத வகையில் பிரதேச மட்டத்தில் குறைந்த மாணவர் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளை நடத்துவதற்கு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
 
சில பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியாத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு, வலய கல்விப் பணிப்பாளருடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்மானத்தை மேற்கொள்ள குறித்த பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அதிகாரம் வழங்கியிருந்தது.
 
பாடசாலை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் சில மாணவர்களுக்கு பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியாவிட்டால் அவர்களுக்கு இணையவழி ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கல்வி அறிவுறுத்தி இருந்தது.
 
இந்த நிலையில், குறித்த காலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்ததுடன், நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையையும் கருத்தில் கொண்டு எதிர்வரும் வாரமும்
அனைத்து பிரதான நகரங்களிலும் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4