முச்சக்கரவண்டி கட்டணத்திலும் உயர்வு!

Prabha Praneetha
4 years ago
முச்சக்கரவண்டி கட்டணத்திலும் உயர்வு!

எரிபொருள் விலை அதிகரிப்பின் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முச்சக்கரவண்டி கட்டணமும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரண்டாவது கிலோமீட்டருக்கான முச்சக்கரவண்டி கட்டணமானது 90 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண அதிகரிப்பானது இன்று முதல் அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

எனினும் முதல் கிலோமீற்றருக்கு 100 ரூபா என்ற கட்டணத்தில் மாற்றம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முச்சக்கரவண்டி கட்டண உயர்வின்படி முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 100 ரூபாவாகவும், இரண்டாவது கிலோமீற்றர் முதல் ஒவ்வொரு கிலோமீற்றருக்குமான கட்டணம் 80 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4