சிலிண்டர்கள் விநியோகம் குறித்து லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு
Prabha Praneetha
2 years ago

அடுத்த மாதம் 6ஆம் திகதிக்கு பின்னர் 120,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாளொன்றுக்கு 12.5 கிலோகிராம் எடையுள்ள 80,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஒரு நாளைக்கு 40,000 சிறிய எரிவாயு சிலிண்டர்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.



