உரிய தரத்தை மீறும் மதுபானசாலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை

Kanimoli
4 years ago
உரிய தரத்தை மீறும் மதுபானசாலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை

மதுபானங்களின் தரத்தை உரிய வகையில் பேணுமாறு கோபா குழு வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய நாடு முழுவதும் முதல் தடவையாக இவ்வாறு பரிசோதனைகள் மேற்கொள்ள மதுவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விற்பனை செய்யப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களின் தரம் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, நாடளாவிய ரீதியாக உள்ள மதுபானசாலைகள், தொழிற்சாலைகள் மற்றும் விநியோக நிலையங்களில் மதுபானங்களின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

உரிய தரத்தை மீறும் மதுபானசாலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4