நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

Kanimoli
4 years ago
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்றையதினம்(24) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை 12 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை வந்தடைந்த அமைச்சருக்கு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

இந்து பௌத்த கலாசார பேரவையின் பொது செயலாளர் எம்.டி.எஸ்.இராமச்சந்திரனின் அழைப்பையேற்றே அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்து பௌத்த கலாசார பேரவையில் இரண்டாம் மொழி கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்திற்கு பிரதம அதிதியாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கலந்து கொண்டுள்ளார்.

மேலும் சில தினங்களுக்கு அவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4