ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது

Kanimoli
4 years ago
 ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது

காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு வெளியே அமைதியான மற்றும் நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதலை துாண்டியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நான்கு மணிநேர வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது.

இன்று முற்பகல் 9.30 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வந்திருந்த அவரிடம், பிற்பகல் 1.00 மணி வரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, கொழும்பு கோட்டை நீதிவானால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

முன்னதாக தம்மை கைது செய்வதை தடுக்கக்கோரி, அவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவையும் தாக்கல் செய்திருந்தார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4