கர்ப்பிணித் தாய்மார்களை வீட்டிலேயே பிரசவம் செய்ய தயாராக இருங்கள்! விடுக்கப்பட்ட அறிவிப்பு

Mayoorikka
4 years ago
கர்ப்பிணித் தாய்மார்களை வீட்டிலேயே பிரசவம் செய்ய தயாராக இருங்கள்! விடுக்கப்பட்ட அறிவிப்பு

கர்ப்பிணித் தாய்மார்களை வீட்டிலேயே பிரசவம் செய்ய தயாராக இருக்குமாறு அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக கர்ப்பிணித் தாய்மார்களை வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாத நிலையில் வீட்டிலேயே பிரசவம் மேற்கொள்ளலாம் என அதன் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
  
தற்போது நிலவும் சூழ்நிலையில் போக்குவரத்து சிரமங்கள் உள்ளதால் எந்த நேரத்திலும் பிரசவத்தை எதிர்கொள்ளும் தாய்க்கு வசதிகளை செய்து கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

பிரசவத்தில் தலையிடுவதற்கான அனுமதியையும் அதிகாரத்தையும் இலங்கை மருத்துவ சபை தமக்கு வழங்கியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4