வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வரியில்லா வாகன இறக்குமதிக்கான உரிமம்!

Mayoorikka
4 years ago
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வரியில்லா  வாகன இறக்குமதிக்கான உரிமம்!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள், இலங்கைக்கு சட்டரீதியாக பணம் அனுப்பும் போது அவர்கள் அனுப்பும் தொகையின் அடிப்படையில் மின்சார (electronic) வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கக்கப்படும் என்று கைத்தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜப்பான் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் (22) ஜப்பான் செல்லும் 12 பேர் கொண்ட பணியாளர்கள் குழுவிற்கும் இஸ்ரேலுக்கு பணிக்காகச் செல்லும் நான்கு பேர் கொண்ட குழுவிற்கும் விமான டிக்கட்டுக்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களுக்கு வரியில்லா சலுகையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்குவதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது வாகன இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதால்இ வங்கி முறையின் மூலம் சட்டரீதியாக பணம் அனுப்பும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை சூரிய சக்தியில் (solar system) சார்ஜ் செய்யக்கூடிய அமைப்பொன்று உருவாக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4