எரிபொருளுக்கு சென்ற இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

Kanimoli
4 years ago
எரிபொருளுக்கு சென்ற இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

கொடகம நகரில் எரிபொருள் வரிசையில் நின்ற இளைஞர் ஒருவர் வேறு ஒரு எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் வந்துள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்றவேளை இடைநடுவில் விபத்தில் சிக்கி பரிதாபகரமாகஉயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மீகொட, தம்பே குகுலவத்தை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய லஹிர ஹஷான் ரணசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொடகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த குறித்த இளைஞர் பாதுக்க துன்னான பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது இவ்வாறு விபத்துக்கு உள்ளாகி உள்ளார்.

குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் திடீரென வீதியில் வீழ்ந்து எரிவாயு ஏற்றிச் சென்ற லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

உயிரிழந்த இளைஞனின் சகோதரனும் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வரிசைக்கு சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பாதுக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4