அன்றாடம் பயன்படுத்தப்படும் சில பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

Prathees
4 years ago
அன்றாடம் பயன்படுத்தப்படும் சில பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ள பொருட்கள் சிலவற்றின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.

அன்றாடம் பயன்படுத்தப்படும் சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.

கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் 135 ரூபாவாக காணப்பட்ட சவர்க்காரத்தின் விலை, தற்போது 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நடுத்தர அளவான பற்பசை ஒன்றின் விலை 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

 நூடில்ஸ் பொதியொன்று 120 ரூபாவாக அதிகரித்துள்ளது. முன்னதாக அந்த நூடில்ஸ் பொதி 55 முதல் 60 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. அத்துடன் பிஸ்கட் வகைகளின் விலைகளும் மீண்டும் அதிகரித்துள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4