மீண்டும் அதிகரிக்கும் டொலரின் பெறுமதி

Prabha Praneetha
4 years ago
மீண்டும் அதிகரிக்கும் டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, கடந்த இரு தினங்களை விட அமெரிக்க டொலரின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.  

இதன்படி, அமெரிக்க டொலரொன்றின்  இன்றைய விற்பனை பெறுமதி 366.83 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

அதேசமயம், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி, 356.28 ரூபாவாக பதிவாகியுள்ளது.  

இதேவேளை, கடந்த 17ஆம் திகதி அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதி 366.32 ரூபாவாகவும்,  கொள்முதல் பெறுமதி 355.51 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, யூரோ ஒன்றின் விற்பனைப் பெறுமதி 387.43 ரூபாவாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 372.95  ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4