ரஷ்ய போர் விமானம் உக்ரைன் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது

Kanimoli
3 years ago
ரஷ்ய போர் விமானம் உக்ரைன் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது

உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் வான் தாக்குதலில் ஈடுபட்டு இருந்த ரஷ்ய போர் விமானம் உக்ரைன் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து விமானி உக்ரைன் இராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார்.

ரஷ்ய ராணுவ படைகள் பின்வாங்கப்பட்டு கிழக்கு உக்ரைனிய பகுதியான டான்பாஸை முழுவதுமாக கைப்பற்றும் நோக்கில் தற்போது தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் வான் தாக்குதலில் ஈடுபட்டு இருந்த ரஷ்ய போர் விமானம் su-25 ஒன்று, உக்ரைனிய வீரர்கள் நடத்திய தாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

வீழ்த்தப்பட்ட விமானத்தின் விமானியையும் உக்ரைனிய ராணுவ வீரர்கள் உடனடியாக போர் கைதியாக சிறைப்பிடித்துள்ளனர்.

இது தொடர்பாக தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள காணொளியில், அரை நிர்வாணமாக தள்ளாடிய படி நடந்து போகும் ரஷ்ய போர் கைதியின் கண்கள் மஞ்சள் நிற மறைப்பான்களால் மறைக்கப்பட்டு உக்ரைனிய வீரர்களால் அவர் அழைத்து செல்லப்படுகிறார்.

சிறைபிடிக்கப்பட்ட ரஷ்ய போர் விமான வீரர், யார் இங்கு இருக்கீறிர்கள் என்று கேட்டதற்கு, உக்ரைனிய வீரர்கள் இது பிளாக் ஜாபோரோஜ்ட்ஸி (கோசாக்ஸ்) என்று அழைக்கப்படும் உக்ரைனின் 72 வது படைப்பிரிவின் போராளிகள் என  உக்ரைனிய ராணுவ வீரர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!