பிரதான நகரங்களின் பாடசாலைகளுக்கு பூட்டு
Mayoorikka
2 years ago

கொழும்பு வலயம் மற்றும் புறநகர் பகுதிகள் மற்றும் நாடளாவிய ரீதியில் அனைத்து பிரதான நகரங்களிலும் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் அடுத்த வாரம் மூடப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு ஏனைய பாடசாலைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, இணையவழி கற்றலுக்கு இடையூறு ஏற்படாத வகையில், அடுத்த வாரத்தில் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் தடைகள் ஏற்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுதியளித்துள்ளது.



