வெளிநாட்டு நிதி கைமாற்று கடன் தொடர்பான நிபந்தனையை திருத்துமாறு இலங்கை சீனாவிடம் கோரிக்கை
Prabha Praneetha
2 years ago

சீனா வழங்கிய ஒன்றரை பில்லியன் டொலர் வெளிநாட்டு நிதி கைமாற்று கடன் தொடர்பான நிபந்தனையை திருத்துமாறு இலங்கை சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சீனா வழங்கியுள்ள இந்த ஒன்றரை பில்லியன் டொலர்களை பயன்படுத்த வேண்டுமாயின் இலங்கையிடம் மூன்று மாதங்களுக்கு தேவையான அந்நிய செலாணி கையிருப்பில் இருக்க வேண்டும் என கடன் தொடர்பான உடன்படிக்கை நிபந்தனை உள்ளடக்கப்பட்டுள்ளது.
இலங்கையிடம் மூன்று மாதங்களுக்கு தேவையான அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லை என்ற காரணத்தினால், அதனை பயன்படுத்த முடியாமல் போயுள்ளதுடன் அந்த கொடுக்கல், வாங்கல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாவே நிபந்தனையை திருத்துமாறு இலங்கை அரசு சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.



