நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் நெல்லை சந்தைக்கு விநியோகிப்பதற்கு இன்று முதல் நடவடிக்கை
Kanimoli
2 years ago
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள 43,000 மெட்ரிக் டன் நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்கு இன்று முதல் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை நெல் சந்தைப்படுத்தல் சபை தலைவர் நீல் டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய சதொச, கூட்டுறவு நிலையங்கள் மற்றும் சிறப்பு அங்காரிகள் ஊடாக நிவாரண விலையில் அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.