கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் காய்ச்சலால் உயிரிழப்பு!

#SriLanka #Jaffna #Canada
Mayoorikka
1 day ago
கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் காய்ச்சலால் உயிரிழப்பு!

கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்தவர் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். 42 வயதுடைய பரமநாயகம் திவாகர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

 கனடாவில் வசித்து வந்த இவர், புத்தாண்டு மற்றும் விடுமுறையைக் கழிப்பதற்காக அண்மையில் யாழ்ப்பாணம் வந்து தனது சொந்த ஊரான வட்டுக்கோட்டையில் உறவினர்களுடன் தங்கியிருந்துள்ளார்.

 இந்த நிலையில், இவருக்கு கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

 நிமோனியா காய்ச்சலே அவர் உயிரிழக்கக் காரணம் என்று மருத்துவ பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 தற்போது இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக, வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

 “இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!