வெனிசுலா ஜனாதிபதி இன்று அமெரிக்க நீதிமன்றில் ஆஜர்!
#America
#world_news
Mayoorikka
1 day ago
அமெரிக்க படையினால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ள வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர் இன்று (5) நிவ்யோர்க்கில் உள்ள பெடரல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 3 ஆம் திகதி அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் கீழ் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ப்ளோரெஸ் ஆகியோர் வெனிசுலாவில் வைத்து கைது செய்யப்பட்டு, பின்னர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத சூழ்ச்சி ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”