இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள பிரித்தானியாவினால் விடுக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கை நீக்கம்
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள பிரித்தானியாவினால் விடுக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.
எனினும், இலங்கைக்கு அத்தியாவசிய பயணங்களை மாத்திரம் மேற்கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாகவும், வரிசைகளில் காத்திருந்து பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருவதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர்த் தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதாகவும் பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், குறுகிய கால அறிவித்தலுக்கு அமைய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் எனவும், நாட்டின் சில பகுதிகளில் இராணுவ பிரசன்னம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஆர்ப்பாட்டங்களில் இருந்து விலகி செயற்படுமாறும், அவதானமாக செயற்படுமாறும் இலங்கைக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது.