டீசல் மாபியாவுடன் இருப்பவர்கள் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உருவாக்குவதற்கு தடை - அலி சப்ரி
Kanimoli
2 years ago

நாட்டில் டீசல் மாபியாவுடன் இருப்பவர்கள் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உருவாக்குவதற்கு தடையாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (09-06-2022) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி,
டீசல் மின் உற்பத்தி நிலையங்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு எதிராக குரல் கொடுக்காத தொழிற்சங்கங்களும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை எதிர்ப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.



