இலங்கைக்கான கட்டார் தூதுவரை சந்தித்தார் ஜீ.எல்.பீரிஸ்

Mayoorikka
4 years ago
இலங்கைக்கான கட்டார் தூதுவரை சந்தித்தார் ஜீ.எல்.பீரிஸ்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதார பின்னடைவை எதிர்கொள்வதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் , இலங்கைக்கான கட்டார் தூதுவருக்கு விளக்கமளித்துள்ளார்.

கட்டார் தூதுவர் ஜாசிம் பின் ஜாபர் ஜே.பி. அல்-சோரூர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
 
இச்சந்திப்பின் போது இலங்கை – கட்டார் இருதரப்பு உறவுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்திய கட்டார் தூதுவர், இலங்கைக்கு வழங்கப்படக் கூடிய சாத்தியமான அனைத்து ஆதரவுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4