கச்சத்தீவை இந்தியாவுக்கு கொடுக்க கூடாது – அன்ரனி ஜேசுதாசன்

#SriLanka #India
Prasu
4 years ago
கச்சத்தீவை இந்தியாவுக்கு கொடுக்க கூடாது – அன்ரனி ஜேசுதாசன்

கச்சத்தீவை இந்தியாவுக்கு கொடுக்கும் எந்த ஒரு முடிவையும் இலங்கை அரசாங்கம் எடுக்க கூடாது என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கோரிக்கையொன்றை விடுத்தார்.

யாழ் மாவட்டத்தில் இன்றைய தினம் மீனவ அமைப்புகளுடன்  கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், நாடு பொருளாதார ரீதியாக பின்னடைந்து இருக்கின்ற நிலையில் நாட்டின் பகுதிகளை வேறு நாடுகளுக்கு விற்பனைக்கோ குத்தகைக்கு வழங்குகின்ற செயற்பாடுகளை செய்ய வேண்டாம் என்றார்.

மேலும் கடற்றொழிலாளர்கள் மண்ணெண்ணையை பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக இந்த கலந்துரையாடப்பட்டதுடன் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4