இளைஞனை தேடி ஹட்டன் சென்ற முல்லைத்தீவு சிறுமி - வெளிவந்த தகவல்

Kanimoli
4 years ago
 இளைஞனை தேடி ஹட்டன் சென்ற முல்லைத்தீவு சிறுமி - வெளிவந்த தகவல்

முல்லைத்தீவு, மூங்கிலாறு பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் குறித்த சிறுமி ஹட்டன் பிரதேசத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதென புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு பணம் மற்றும் கைத்தொலைபேசியுடன் சிறுமி வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக சிறுமியின் தந்தை நேற்று பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறுமி எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதத்தில், “அப்பா, மன்னிக்கவும். நான் இந்த வீட்டை விட்டு செல்கிறேன். என்னைத் தேடி கஷ்டப்பட வேண்டாம். தேவை ஏற்பட்டால் தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொள்ளுங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் சிறுமியின் தந்தை உட்பட பொலிஸார் நேற்று முதல் குறித்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்ட போதும், அது செயலிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிடைத்த தகவலுக்கமைய, குறித்த பாடசாலை மாணவி ஹட்டன் பகுதிக்கு சென்றுள்ளதாகவும், சமூக வலைத்தளமான Tik Tok மூலம் அடையாளம் கண்ட நபர் ஒருவரை அவர் சந்தித்துள்ளதாகவும் சந்தேகிப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுமியின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் சிறுமியை தேடி வீட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4