நாட்டை பாதாளத்துக்கு தள்ளிய குழுவுடன் சேர்ந்து புதிய பிரதமருக்கு நாட்டை கொண்டு செல்லமுடியுமா?-முஜிபுர் ரஹ்மான்

Kanimoli
4 years ago
நாட்டை பாதாளத்துக்கு தள்ளிய குழுவுடன் சேர்ந்து புதிய பிரதமருக்கு நாட்டை கொண்டு செல்லமுடியுமா?-முஜிபுர் ரஹ்மான்

நாட்டை பாதாளத்துக்கு தள்ளிய குழுவுடன் சேர்ந்து புதிய பிரதமருக்கு நாட்டை கொண்டு செல்லமுடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றில் இன்று கேள்வி எழுப்பினார்.

நாட்டு மக்கள் இன்று எரிமலைக்கு மேல் நின்று கொண்டிருக்கின்றனர். இந்த எரிமலை எப்போதாவது வெடிக்கும் அபாயம் உள்ளது.

இந்நிலையில் நாட்டின் பொருளாதார பிரச்சினை காரணமாக இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை 30 வீதத்தினால் அதிகரித்துள்ளது வெளிநாட்டு அறிக்கை ஒன்றையும் இதற்காக கோடிட்டு காட்டினார்.

இவ்வாறான சூழ்நிலையில் தாம் தோல்வியடைந்த ஜனாதிபதியாக விலகப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதியின் கருத்து, பாரதுாரமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்காத ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு மத்தியில் இலங்கையை கடவுளே காப்பாற்றவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை தாம், விலகிச் செல்லப்போவதில்லை என்று ஜனாதிபதி கூறியிருக்கும் நிலையில் தொடர்ந்தும் அவர் எடுக்கும் தவறான தீர்மானங்களுக்கு நாடு முகங்கொடுக்கப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை விடுத்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4