இலங்கை இராணுவத்தின் தற்போதைய பிரதிப் பிரதானியான மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு

Kanimoli
4 years ago
இலங்கை இராணுவத்தின் தற்போதைய பிரதிப் பிரதானியான மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு

இலங்கை இராணுவத்தின் தற்போதைய பிரதிப் பிரதானியான மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு நாளை முதல், இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்ட ஜெனரல் ஜகத் கொடித்துவ
நாளை (08) முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. 

மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு, இராணுவத்தின் 60ஆவது படைத் தளபதியாக நியமனக் கடிதத்தை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவிடமிருந்து இன்று பெற்றுக்கொண்டார்.

2021 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் பிரதிப் பிரதானியாக பதவியேற்கும் முன்னர் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தளபதியாகப் பணியாற்றிய இவர், இராணுவத்தில் பல முக்கிய நியமனங்களையும் பெற்றுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4