யாழ்.மாவட்டத்திற்கு மண்ணெண்ணெய் விநியோகம்!

Mayoorikka
4 years ago
யாழ்.மாவட்டத்திற்கு மண்ணெண்ணெய் விநியோகம்!

கமநல சேவைகள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளுக்கு இன்றும் நாளையும் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசனின் அறிவுறுத்தலின் பிரகாரம், கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து இந்த நவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.

பயிர்ச்செய்கை நிலங்களின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்குவதற்கு அண்மையில் எரிபொருள் அட்டை வழங்கப்பட்டது.

அந்த அட்டையைக் காண்பித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இன்றும் நாளையும் மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4