மகிந்த பிரதமராகலாம்! பசில் அதிரடி

Kanimoli
4 years ago
மகிந்த பிரதமராகலாம்! பசில் அதிரடி

"ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான மகிந்த ராஜபக்ச அழுத்தங்களுக்கு அடிபணிந்து பிரதமர் பதவியிலிருந்து விலகவில்லை.

அவர் சுயவிருப்பின் பேரிலேயே பதவி விலகினார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிடமே பெரும்பான்மைப் பலம் தொடர்ந்தும் உள்ளது.

எனவே, பிரதமர் பதவியிலிருந்து விலகிய மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகினாலும் அதிசயம் இல்லை.என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் சுயவிருப்பத்துக்கிணங்கவே புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.

அதற்காக ரணிலின் நியமனத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் எதிர்ப்பு என்று அர்த்தம்கொள்ள முடியாது.

அரச தலைவர் - பிரதமர் இணைந்து முன்னெடுக்கும் நாட்டின் முன்னேற்றகரமான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆதரவு வழங்கும்" என்றும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4