பதவி விலகல் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய அதிரடி

Kanimoli
4 years ago
பதவி விலகல் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய அதிரடி

தனது பதவிக்காலம் முடிவதற்குள் பதவி விலகப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமக்கு ஐந்தாண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எஞ்சிய இரண்டு வருடங்களையும் பூர்த்தி செய்வதாக உறுதிமொழி எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆனாலும் தான் மீண்டும் ஒரு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய  மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டம் 50 நாட்களை கடந்து செல்கின்றன. 

அதேவேளை எதிர்க்கட்சி உட்பட பல அரசியல் கட்சிகளின் கோடடாபயவின் பதவி விலகலை வலியுறுத்தி வருகின்றன. 

மறுபுறத்தில் 21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் மூலம் ஜனாதிபதிக்கான அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4