2 கப்பல்களில் லிட்ரோ எரிவாயு வந்தடைந்தது

Mayoorikka
4 years ago
2 கப்பல்களில் லிட்ரோ எரிவாயு வந்தடைந்தது

லிட்ரோ எரிவாயு நிறுவனத்துக்கு இன்றும் (06) நேற்றும் (05) 4,500 மெற்றிக் தொன் எரிவாயு கிடைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர், இன்று (06) தெரிவித்தார்.

குறித்த நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 2,000 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (06) பிற்பகல் இலங்கை வந்தடைந்ததாகவும் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

2,500 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை நேற்று (05) வந்தடைந்த நிலையில், எரிவாயு விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4