இலங்கையில் சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் தொடர்பில் குழந்தை நல மருத்துவர் எச்சரிக்கை!

Nila
4 years ago
இலங்கையில் சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் தொடர்பில் குழந்தை நல மருத்துவர் எச்சரிக்கை!

கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் சிறுவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வைரஸினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உடலில் சிவப்புக் கொப்புளங்கள் தோன்றுவதாக குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்நோய் இலகுவாகப் பரவும் என்றும் ஒரு தடவை தொற்றுக்கு உள்ளான சிறுவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது கொடிய நோயல்ல என்றும் 6 மாதம் முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பரசிற்றமோல் போன்றவற்றைக் குடிக்கக் கொடுத்து வீட்டில் ஓய்வெடுக்க வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4