630 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

Prabha Praneetha
4 years ago
630 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட சுமார் 630 கிலோ கடல் அட்டைகள் ராமேஸ்வரம் வனத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்து பதப்படுத்தி பதுக்கி வைக்த்திருந்த நபர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் அருகே உள்ள எம்ஆர்டி நகர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோப்பு ஒன்றில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதப்படுத்தி சேராங்கோட்டை கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்த இருப்பதாக வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து ராமேஸ்வரம் வனத்துறை அதிகாரிகள் நேற்று இரவு ராமேஸ்வரம் அடுத்துள்ள எம்ஆர்டி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 630 கிலோ தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் பதப்படுத்தப்பட்டு சாக்கு மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த தெரியவந்ததை அடுத்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் அந்த தோட்டத்தின் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 630 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கடத்த இருந்தது தெரிய வந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4