கையிருப்பு இல்லாத காரணத்தால் டீசல் விற்பனை மட்டுப்படுத்தப்பட்டது

Kanimoli
4 years ago
கையிருப்பு இல்லாத காரணத்தால் டீசல் விற்பனை மட்டுப்படுத்தப்பட்டது

டீசல் விநியோக செயற்பாட்டை மட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டீசல் கையிருப்பு குறைந்தளவில் காணப்படுவதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


 
இதன்படி முன்னுரிமை பட்டியலில் தெரிவு செய்யப் பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரம் டீசல் விநியோகிக்கப்படும் என அதன் செயலாளர் கபில நாதுன்ன தெரிவித்தார்.

தினசரி விநியோகம் 2,500 மெற்றிக் தொன்
டீசல் கையிருப்பு குறைவு! விநியோகத்தில் விதிக்கப்பட்ட புதிய  கட்டுப்பாடு

தற்போது தினசரி டீசல் விநியோகம் சுமார் 2,500 மெற்றிக் தொன் வரையில் குறைக்கப்பட்டுள்ளதாகவும்,

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் தற்போது சுமார் 40,000 மெற்றிக் தொன் டீசல் மாத்திரமே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் 9 அல்லது 10 நாட்களில் ஒரு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் ஆனால் அது தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை யில் இல்லையென தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் உதவியுடன், அடுத்த டீசல் கப்பல் எதிர்வரும் 16ஆம் திகதி நாட்டை வந்த டையும் வரையில், தற்போது கையிருப்பில் உள்ள டீசலை வைத்து தற்போதைய நிலைமையை முன்னெடுத்துச் செல்ல முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4