பூஜ்ய நிலையில் இலங்கையின் டொலர் கையிருப்பு ரணிலின் திடீர் அறிவிப்பு

Kanimoli
4 years ago
பூஜ்ய நிலையில் இலங்கையின் டொலர் கையிருப்பு ரணிலின் திடீர் அறிவிப்பு

இலங்கையில் தற்பொழுது டொலர் கையிருப்பானது பூஜ்ஜியம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இந்த அரசாங்கத்தை நான் ஒப்படைக்கும் போது ஏழரை பில்லியன் டொலர்கள் இருந்தன, எனினும் அவை தற்போது இல்லை.

இருப்பினும் அதனை சமாளித்து நாட்டை பொறுப்பேற்க ஒருவர் தேவை , அந்த பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.
 
எனது தலமையின் கீழ் அமைக்கப்பெற்ற அமைச்சரவையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளனர். அனைவரும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றோம். அதனை தவிர்ப்பதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம், 

இந்த நெருக்கடி தருணத்தில் இந்தியா அளப்பரிய உதவிகளை செய்து வருகின்றது.

அதேபோல் சர்வதேச நாணய நிதியத்திடமும் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டு வருகின்றோம்.
 
இருப்பினும் என்னும் சில நாட்களில் 30 - 40 மில்லியன் டொலர்களே கையிருப்பு இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4