அச்சுவேலி விவசாயிகளுக்கு டீசல்

#SriLanka #Jaffna #Lanka4
Shana
4 years ago
அச்சுவேலி விவசாயிகளுக்கு டீசல்

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இன்றைய தினம் டீசல் வழங்கப்பட்டன.

தொடர்ச்சியாக விவசாயிகள் டீசல் இன்றி உழவு இயந்திரங்கள் மூலம் உழுது சிறுபோக செய்கையினை மேற்கொள்ள சிரமங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் குறித்த டீசல் கோப்பாய் பிரதேச செயலகம் வலி கிழக்கு வடபகுதி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் அச்சுவேலி மற்றும் விவசாய சம்மேளனத்தின் சிபாரிசுக்கு அமைய அச்சுவேலி பொலிசாரின் கண்காணிப்புடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

நீண்டகாலமாக வரிசையில் நின்று நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து டீசலை சரியான முறையில் பெற்றுக் கொள்ள முடியாத விவசாயிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஊடாக இலகுவாக தமக்கான டீசலை அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக பெற்றுக் கொண்டனர்.

இவ்வாறு மண்ணெணணெய்யும் இம்முறைப்படி வழங்குவதனூடாக விவசாயச் செய்கை மேம்படுத்துவதற்கு இலகுவாக அமையும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

குறித்த அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் செயற்பாட்டினை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இவ்வாறு விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு டீசல் வழங்கப்பட்டமை இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4