ஜூன் 15ஆம் திகதி முதல் போக்குவரத்துத் துறையில் மாற்றங்கள்

Prabha Praneetha
4 years ago
ஜூன் 15ஆம் திகதி முதல் போக்குவரத்துத் துறையில் மாற்றங்கள்

ஜூன் 15ஆம் திகதி முதல் போக்குவரத்துத் துறையின் முன்னேற்றத்திற்காக கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பொதுப் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் போக்குவரத்து அமைச்சர் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் நிறுவனங்களின் தலைவர்களுக்கு இடையில் நேற்று  இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் சந்திப்பொன்று இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை அன்றாட நடவடிக்கைகளுக்கான போக்குவரத்து மற்றும் அலுவலக ரயில் மற்றும் பேருந்து சேவைகள், பள்ளி மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் போன்றவை சில நாட்களுக்குள் மேம்படுத்த பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது .

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4