காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

#SriLanka #Lanka4 #Kalmunai
Shana
2 years ago
காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

கல்முனையில் பொது மைதானத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவில் உடையார் வீதியை சேர்ந்த 58 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான காளிக்குட்டி கணேசன் கடந்த வியாழக்கிழமை (2) மாலை காணாமல் போயிருந்த நிலையில் பொது மைதானத்தில் சடலமாக காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கி இருந்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு கல்முனை பொலிஸ் குழுவினர் சென்று விசாரணை மேற்கொண்டு தடயப்பொருட்களை ஆய்வு செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சடலத்திற்கு அருகில் இருந்து அலறி விதைகள் மீட்கப்பட்டிருந்தன. சம்பவ இடத்தில் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலைய பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!