திருகோணமலையில் புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது!

Prabha Praneetha
2 years ago
திருகோணமலையில் புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது!

பெரும் பொருளாதாரச் சூழ்நிலையில் இலங்கை சிக்கித்தவிக்கையில் பொருட்களின் விலையேற்றம் 4-6 மடங்கு விலையேறியிருந்த நிலையிலும் எமது அறப்பணிமையத்தால்  வேலைத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டே வருகிறது! 

சுவிஸ் பேர்ன் மாவட்டத்தில்வசிக்கும் சுவிஸ் மன்ற சக்திகளான திரு . திருமதி ஶ்ரீதரன் சுயமதி தம்பதிகள் இதற்கான நிதியனுசரணையை வழங்கிவைத்துள்ளனர் .

அண்மையில்  அம்பாறை மாவட்டத்தில் இவர்களது நிதுயனுசரணையில் ஒரு வீட்டினைக் கட்டிக் வாழ்வாதாரமற்ற பெண்தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு கையளித்துள்ள நிலையில் மிகவும் சந்தோஷப்பட்டு மீண்டும் ஒரு வீட்டினை கட்டிக்கொடுக்க 1000sf கினை நேரடியாக திருகோணமலை ஆதிபராசக்தி அறப்பணிமையவங்கிக் கணக்கிலக்கத்திற்கு அனுப்பிவைத்தனர் .

அவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவிக்கும் அதேவேளை இதை உடனடியாக திருகோணமலையில் புதிய வீட்டினை கட்டிக்கொடுக்க பணியினை  விரைந்து ஏற்பாடுசெய்துள்ள எமது திருகோணமலை மாவட்ட அறப்பணிப் பொறுப்பாளர் சக்தி செந்தூரன் விரைந்து செயலாற்றி வருகிறார் .

trinco

அவருக்கும் அவருடனான அறப்பணியாளர்களுக்கும் எமது நன்றிகள் ? சிரமதான அடிப்படையில் எமது அறப்பணியாளர்கள் சுழற்சிமுறையில் கூலிகள் இன்றி ஒரேயொரு மேசனை வைத்து கட்ட முடிப்பதால் மாத்திரமே எமது பணிகள் குறைந்த நிதியில் நிறைவான பணிகளை செய்து முடிக்கக்கூடியதாகவுள்ளது.

இதனால் தான் எம்மை அணுகி வீடற்றவர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க தர்மசிந்தனையுள்ளோர் பூரண திருப்தியோடு எம்மை அணுகி உதவிட முன்வருகின்றனர் .

trinco

அன்பான உறவுகளே உங்கள் ஒத்தைரூபாய் உழைப்பைக்கூட வீண் விரையம் செய்யாது தமது வியர்வைசிந்தி அறம்சார்ந்து உழைத்து ஏழைமக்கள் துயர்தீர்க்க அறப்பணித் தொண்டர்கள் எப்போதும் தயாராகவே உள்ளனர்.

trinco

ஆகவே ஆதிபராசக்தி அறப்பணி மையத்தை அழையுங்கள் 

அதிக பொருட்செலவில் உங்கள் உழைப்பை கொட்டிக்கொடுக்காமல் பலர் பயன்பெற குறைந்த செலவில் நிறைந்தபணியாற்ற பல மாவட்டங்களிலும் எமது அறப்பணியாளர்களும் , ஒழுங்கமைப்பாளர்களும் , இதயசுத்தியோடுகூடிய தர்மசிந்தையோடு காத்திருக்கிறார்கள் ! 

 

உங்கள் குடும்ப உறவினர் பிறந்தநாள் , திருமணநாள் , மற்றும் மஞ்சள் நீராட்டுவிழா போன்ற விழாக்களையொட்டி ஒரு குடும்பத்தை நின்மதியாக வாழவைக்க ஒரு வீடுகட்டித்தரமுடியும்.

அது ஒரு பெரிய கைங்கர்யம்ஆகும். உதவிடவிரும்பின் எப்போது வேண்டுமானாலும் எம்மை அழையுங்கள் 


24 மணிநேரமும் உங்கள் அழைப்பு ஏற்கப்படும்.
0041 78 608 73 15
ஒரு வீடு கட்ட 1000/1200 sf மட்டுமே!

 

உங்கள் குடும்பம் பெயரில் ஓர் அழகிய இல்லம் 
நின்மதியாகவும் பாதுகாப்பாகவும் படுத்துறங்க
உங்கள் கைகளை கொஞ்சம் எங்களிடம் நீட்டுங்கள்.??