ரஷ்ய விமானம் இலங்கையை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை உத்தரவு

Prathees
4 years ago
ரஷ்ய விமானம் இலங்கையை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை உத்தரவு

ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அயர்லாந்தில் உள்ள Celestial Aviation Trading Limited  நிறுவனம் தாக்கல் செய்த முறைப்பாட்டினை விசாரித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த தடை உத்தரவு வரும் 16ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியன் ஏர்லைன்ஸுடன் தனக்கு ஒரு தீர்வு வழக்கு இருப்பதாக  முறைப்பாட்டினை தாக்கல் செய்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே, பதில் அளிக்கும் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இலங்கையை விட்டு வெளியேறாமல் தடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறித்த நிறுவனம் இது தொடர்பான முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளது.

குறித்த முறைப்பாட்டை பரிசீலித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4