ஆதரவாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட்ட நாமல்

Kanimoli
4 years ago
ஆதரவாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட்ட நாமல்

தென்னிலங்கையில் தமது கட்சி ஆதரவாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச நேரில் விஜயம் செய்துள்ளார்.

நேற்றைய தினம் அவர் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்திருந்தார்.

இதன் ​போது கடந்த மே மாதம் 09ம் திகதி நடைபெற்ற நாட்டின் பதற்ற சூழல் மற்றும் வன்முறைகளின் போது சேதமாக்கப்பட்ட தமது ஆதரவாளர்களின் சொத்துக்கள் மற்றும் வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்‌ஷவின் தென்னிலங்கை விஜயத்தின் ​போது ஏராளமான பொலிஸார் பாதுகாப்புக்காக அவருடன் சென்றிருந்தததுடன், அவ்வப்பிரதேச பொலிஸாரும் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

கடந்த மே மாதம் 09ம் திகதி ஏற்பட்ட பதற்ற சூழலின் பின்னர் ராஜபக்‌ஷ குடும்பத்தில் ஒருவர் பொதுவௌியில் பகிரங்கமாக நடமாடிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

 நாமல் ராஜபக்ஷவின் இந்தப் பயணத்தின் போது ராஜபக்‌ஷ குடும்பத்தின் உறவினரும் முன்னாள் அமைச்சருமான டீ.வி. ஷானகவும் இணைந்து கொண்டிருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4