அனுராதபுரத்தில் கோர விபத்து - தாயும் மகளும் உயிரிழப்பு

#SriLanka #Accident #Death
Prasu
4 years ago
அனுராதபுரத்தில் கோர விபத்து - தாயும் மகளும் உயிரிழப்பு

அனுராதபுரம், கவரக்குளம், வண்ணமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

தந்தையும் மகனும் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (02) அதிகாலை 5.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்து இடம்பெற்ற விதம் அங்கிருந்த சிசிடிவி கெமெராவில் பதிவாகியுள்ளது.

தம்புள்ளையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

உயிரிழந்தவர்கள் தம்புள்ளை ரத்மல்கஹா எல பிரதேசத்தில் வசிக்கும் தாய் மற்றும் மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கவரக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4