சீரற்ற காலநிலை காரணமாக 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

#SriLanka #weather
Prasu
4 years ago
சீரற்ற காலநிலை காரணமாக 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

உயிரிழந்தவர் இரத்தினபுரி- கிரியெல்ல பிரதேசத்தில் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதேநேரம், மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்தவரே அனர்த்தங்களினால் காயமடைந்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சீரற்ற காலநிலையினால் 7 மாவட்டங்களில் 5 ஆயிரத்து  357 குடும்பங்களைச் சேர்ந்த 22 ஆயிரத்து 338 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தங்களினால் 174 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், பாதிக்கப்பட்ட 192 குடும்பங்களைச் சேர்ந்த 690 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4