சிறு போகத்திற்கு மோடி உரம் வழங்குவார்: ஜனாதிபதி நம்பிக்கை !!

#SriLanka #D K Modi #Sri Lanka President
 சிறு போகத்திற்கு மோடி உரம் வழங்குவார்: ஜனாதிபதி நம்பிக்கை !!

சிறு போகத்திற்கு தேவையான உரத்தினை விரைவில் வழங்குவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்த உரம் கிடைக்கப் பெற்றதும் அவற்றை 20 நாட்களுக்குள் நாடு பூராகவும் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நீர்பாசனத் துறை எதிர்நோக்கும் சிக்கல் தொடர்பில் நேற்று (1) மாலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறு போகத்திற்கு நீர்பாசனத் திணைக்களத்தினால் 50 வீதமான வயற்காணிகளுக்கு நீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4